நடிகை திரிஷா கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த மே4 ஆம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதை தொடர்ந்து அவரது நண்பர்கள் பலரும் திரிஷாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறினர். அந்த வரிசையில் திரிஷாவின் நெருங்கிய தோழியும், பிரபல நடிகையுமான ஷார்மி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
மேலும், நடிகை சார்மி திரிஷாவின் திருமணம் குறித்து ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதில், திரிஷா பேச்சிளராக கொண்டாடும் கடைசி பிறந்த நாள் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது திரிஷா கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் தெரிந்துகொள்ள முடிகிறது.