புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய வழிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் வியாழக்கிழமை முதல் கடைபிடிக்க வேண்டிய நடை முறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.
அதில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஏ.சி வசதியின்று நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் என்றும் மளிகை பலசரக்கு கடைகளில் 50 சதவீதம் மட்டுமே பொது மக்கள் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மளிகை, பலசரக்கு காய்கறி தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும். அதில் பார்சல் மட்டுமே வழங்க அனுமத்திப்பப்படுள்ளது என்று தெரிவித்துள்ளார்.