உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், திமுக கட்சியின் இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013ம் ஆண்டு வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில் அவர் தற்போது இயக்கவிருக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இத்தகவல் ஒரு வதந்தி என்றும் இதில் நாயகனாக இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.