Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் டிவிட்…!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ராஜாஜி மருத்துவமனையிலும் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன.

இதைத்தொடர்ந்து சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் 13 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கின்றது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |