தளபதி விஜய் படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனை படைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சுறா மற்றும் வசீகரா திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்கள் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இச்செய்தி விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.