Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவே வேண்டாம்…. அரசியலுக்கு வரட்டா…. வைரலாகும் தல அஜித்தின் பேட்டி…!!!

நடிகர் அஜித் சினிமாவே வேண்டாம், அரசியலுக்கு வரட்டா என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் அஜித் சொன்ன விஷயம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி அஜித் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்தபோது சினிமாவே வேண்டாம். அரசியலுக்கு வரட்டா என்று கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த செய்தியை பார்க்கும் ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமன்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |