Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அணுமின்நிலைய சமூக நிதியிலிருந்து… 50 லட்சம் மதிப்பிலான நவீன உபகரணங்கள்… அரசு மருத்துவமனைக்கு வழங்கிய மாவட்ட கலெக்டர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நவீன உபகரணங்களை கல்பாக்கம் அணுமின்நிலைய நிதியிலிருந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 50 லட்சம் மதிப்பிலான 7 இ.சி.ஜி. எந்திரங்கள், 5 கிலோவாட் திறன் கொண்ட 3 ஜெனரேட்டர்கள், 42 பீட்டல் டாப்ளர், 27 நெபுலைசர் கருவிகள், 30 தெர்மோமீட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அல்லியிடம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கியுள்ளார்.

அப்போது கல்பாக்கம் அணுமின் நிலைய பிரதிநிதி சீனிவாசன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டரான பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் பொன்ராஜ் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனைகளில் 1500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் இருப்பதாகவும், கூடுதலாக 2000 படுக்கை வசதிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் கூறியுள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |