ரயிலில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முரளி மனோகரன் மற்றும் போலீசார் காக்கிநாடா மாநிலத்தில் இருந்து பெங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயிலில் இருக்கும் 30 மூட்டைகளில் 60 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கன்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து போலிசார் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெருமாள் பேட்டையில் வசித்து வரும் கணேசன் மனைவி உமா மற்றும் அதே பகுதியில் வசிக்கும் சிவாஜி மனைவி ரேகா இருவரும் ரேஷன் அரிசியை கடத்திய சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் உமா மற்றும் ரேகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.