அஸ்திரேலியாவில் 90 மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்திய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் போலீஸ் நடத்திய போதைப் பொருள் ஒழிப்புச் சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. இங்கிலாந்திலிருந்து வந்த இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் குழுவை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை இல்லாத வகையில், 90 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கொண்டு 12 மில்லியன் ‘எக்ஸ்டஸி மாத்திரை’களைத் தயாரிக்க முடியும் என்று கூறினர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த 4 பேரும் 40 லிருந்து 60 வயது உள்ளவர்கள் என்றும் மேலும் ஓர் ஆஸ்திரேலியா ஆணுக்கு வயது-26 எனவும், மற்ற ஆஸ்திரேலியா பெண்ணின் வயது 51 எனவும் தெரிவித்தனர். இதேபோல் நியூஸிலாந்தில் நடத்தப்பட்ட சோதனையில் 200 கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.