Categories
Uncategorized உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை கருவியில் ஊழல்…. ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சியால் 9000 பேருக்கு பரிசோதனை…. அதிரடி நடவடிக்கையில் இந்தோனேஷிய போலீசார்….!!

கொரோனா பரிசோதனைக்காக ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சிகளை கொண்டு மற்றொருவருக்கு பயன்படுத்திய மருந்து நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் மேடன் பகுதியில் kualanamu விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்திருக்க வேண்டும். இதனால் அந்த விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள அரசுக்கு சொந்தமான kimia farma என்ற மருந்து நிறுவனம் வினியோகம் செய்த ஆன்டிஜன் விரைவான சோதனைக் கருவிகளை விமான நிலைய அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

அங்கு எடுக்கப்படும் சோதனையில் தவறான முடிவுகள் வருவதாக பல பயணிகள் புகார் அளித்து வருகின்றனர். இதனால் கடந்த வாரம் ஒரு போலீசார் அதிகாரி அந்த விமான நிலையத்திற்கு சோதனை செய்வதற்கு பயணி போல் வேடம் அணிந்து வந்துள்ளார். அவருக்கு குச்சி மூலம் மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்ற அதிகாரிகள் அதிரடியாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பரிசோதனை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ஏற்கனவே சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட குச்சிகளை கழுவி மீண்டும் பயன்படுத்துவதற்கு வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவருக்கு பயன்படுத்திய குச்சிகளைக் கொண்டு சுமார் 9000 பயணிகளுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவ்வாறு குச்சிகளை கழுவிப் பயன்படுத்தியதன் மூலம் சுமார் 1.8 பில்லியன் இந்தோனேஷியா ரூபியா ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |