நெல்லையில் விவசாயினுடைய வீட்டில் மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் விவசாயியான மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாசானம் தன்னுடைய குடும்பத்துடன் வீட்டினுடைய பின்புறத்திலிருக்கும் கதவை காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டிலுள்ள பீரோவிலிருந்து 15 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து தூங்கி எழுந்த மாசானம் மர்ம நபரின் துணிச்சலான செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் ராதாபுரம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.