ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவுகிறது . இந்நிலையில் கடந்த மாதம் 9 ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, போட்டி பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் இடம்பெற்றுள்ள சில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இதனால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக , பிசிசிஐ அறிவித்தது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதால் ,இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ,வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் ஆகிய சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ கட்டாயம் ஏற்படுத்தும் என்று உறுதி அளித்தது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 8 வீரர்கள்(பட்லர், பேர்ஸ்டோ, சாம் கர்ரன், டாம் கர்ரன், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, ஜேசன் ராய்) லண்டன் நகருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அந்நாட்டு விதிமுறைகளை பின்பற்றி 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் வீட்டிற்குச் செல்வார்கள். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாததால் ,மாலத்தீவுக்கு சென்று சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ,நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துவருகின்றது.