ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.
குழந்தை இல்லாத தம்பதிகள் ஆளுக்கு ஒரு செவ்வாழை பழத்தை அரை ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் இளம் ஆலம் விழுது 20கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து மாதவிடாய் வந்த முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இதனை மூன்று மாதங்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் சரியாகும். விரைவில் குழந்தை வரம் கிடைக்கும்.