Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தந்தை இறந்த துக்கத்தை தாங்காத மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் தந்தை இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாத மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது இவருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவரது குடும்பத்தினர்கள் சிகிச்சைக்காக ரங்கநாதனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரங்கநாதன் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ரங்கநாதனின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டுவந்தனர். இதனை தாங்காத அவருடைய மகன் ரவிச்சந்திரன் திடீரென்று உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |