கொரோனாவின் 3ஆம் வலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா 2ம் அலை தீவிரமாக மக்களை தாக்கி கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் கொரோனா 2ம் அலை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது கொரோனா 3-ம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் கொரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக உச்சநீதிமன்றம் கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இப்போது இருந்தே தொடங்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகுந்த பாதுகாப்புடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.