Categories
உலக செய்திகள்

“ஓடும் இரயிலில் பெண் முன்பு ஆடைகளை அவிழ்த்த நபர்!”.. சிசிடிவியில் பதிவான காட்சி.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் இரயிலில் பெண் பயணியின் முன் கேவலமாக நடந்து கொண்ட நபர் குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 3 ஆம் தேதி அன்று, காலையில் சுமார் 8:40 மணிக்கு பெக்சிலேவிலிருந்து லண்டன் விக்டோரியாவிற்கு சென்ற ரயிலில் ஒரு பெண் பயணித்துள்ளார். அப்போது அவரின் அருகில் வந்து அமர்ந்த ஒரு நபர், திடீரென்று தன் ஆடைகளை அவிழ்த்து கேவலமாக செயல்பட்டிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே அங்கிருந்து எழுந்து அடுத்த பெட்டிக்கு  சென்றுவிட்டார். அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். தற்போது அந்த நபர் தொடர்பான சிசிடிவி புகைப்படங்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, விரைவில் அந்த நபர் குறித்த விபரம் கிடைக்கும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |