பிரபுதேவாவின் பஹீரா படத்தில் இடம்பெற்ற சைக்கோ ராஜா பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், அம்ரியா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
https://twitter.com/Adhikravi/status/1390268233547063302
திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பஹீரா படத்தில் இடம் பெற்ற ‘சைக்கோ ராஜா’ பாடல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.