ஜி.வி- சித்தார்த் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் வெளியீடு தேதி பற்றி படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து நடித்திருக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். இவர்கள் இணைந்து நடிக்கும் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை எட்டியுள்ளது. இதையடுத்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அடுத்த மாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் சித்து குமார் இசையமைத்துள்ளார். மேலும் சித்தார்த் டிராபிக் போலீசாகவும், ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸாராகவும் நடித்துள்ளனர். அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பகா ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரிப்பாளராகவும் பிரசன்னா ஒளிப்பதிவளராகவும், எடிட்டராக சான் லோகேஸூம் இப்படத்தினை தயாரித்துள்ளனர்.