இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இதனுடைய தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 898 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 195 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிகை 1,974 ஆகவும், 21,546 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,51,508 ஆக உயர்ந்துள்ளது. 11,31,468 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.