Categories
உலக செய்திகள்

பிரிட்டன்-பிரான்ஸ் மோதல்.. ஜெர்சி தீவிற்கு அனுப்பப்பட்ட போர்க்கப்பல்கள்.. அதிகரிக்கும் பதற்றம்..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு இரு நாடுகளும் போர்கப்பல்களை அனுப்பியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மேலும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன் அரசு பிரான்ஸ் மீன்பிடி கப்பல்கள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி அளித்ததால் அதன் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்று பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது.

இதற்கிடையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்சி தீவின் முதலமைச்சர் Senator John Le Fondreஉடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்பு, அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் கூறினார். இதனால் ஏற்படும் பதற்றங்களை குறைக்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் அலுவகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மீன் பிடிப்பது தொடர்பில் ஜெர்ஸி தீவு மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு ஏற்பட்ட  மீன்பிடி பிரச்சினைகளை, எதிர்த்து போராடும் விதமாக சுமார் 60 மீன்பிடி படகுகளை பிரான்ஸ் ஜெர்சி தீவிற்கு அனுப்பியிருக்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கையாக பிரிட்டன் ஏற்கனவே 2 போர்கப்பல்களை கண்காணிப்பதற்காக ஜெர்சி தீவிற்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் பிரான்சும் 2 போர்க் கப்பல்களை அனுப்பியதால் மேலும் பதற்றம் நீடிக்கிறது.

Categories

Tech |