பிக்பாஸ் பிரபலம் சிவானி அம்மாவுடன் பாலாஜி எடுத்த செல்பி புகைப்படம் வெளியாகியது .
சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சிவானி. இதையடுத்து இவர் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் சிவானி பிக்பாஸ் வீட்டில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார். மேலும் சிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது பாலாஜியுடன் நெருக்கமாக இருந்ததற்காக சிவானியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று சிவானி தனது பிறந்தநாளை பாலாஜியுடன் கொண்டாடியுள்ளார். மேலும் பாலாஜி ஷிவானிக்கு கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது . தற்போது பாலாஜி சிவானி அம்மாவின் தோள் மீது கை போட்டு எடுத்த செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் .