மும்பையில் தனது தந்தையை கடித்த தெரு நாயை 17 வயது சிறுவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் தனது தந்தையுடன் 17 வயது சிறுவன் வசித்து வந்தான். அந்த சிறுவனின் தந்தை ஏப்ரல் 28ஆம் தேதி தெருவில் நடந்து கொண்டு சென்றிருந்த போது அங்கு இருந்த தெருநாய் ஒன்று சிறுவனின் தந்தையை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது தந்தையை கடித்த நாயை கொடூரமாக தாக்கினான்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பீட்டா அமைப்பினர் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து பீட்டா அமைப்பினர் சம்பவம் குறித்து தெரு நாயை அடித்துக் கொன்ற 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.