நெல்லை மாவட்டம் தென்காசி அருகே எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்களின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த sdpi கட்சியை சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் மற்றும் வடகரை பகுதி நகர பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வடகரைபகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்றைய தினம் இவர்கள் வீட்டு முன்பு இருந்த இரு சக்கர வாகனங்களான டிவிஎஸ் ஜுபிடர், splendor plus வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதில் இரண்டு வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளனர். அதிகாலையில் கருகிய நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தை பார்த்த அப்துல் மற்றும் முகமது இஸ்மாயில் இது குறித்து அச்சம் புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் வடகரையில் உள்ள பிரதான சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.