Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவங்ககிட்ட நெருக்கமா இருந்தா மட்டும்தான்’… ‘டீம்ல விளையாட முடியும்’… ஜுனைத் கான் சாடல் …!!!

பாகிஸ்தான் தேர்வுக்குழு நிர்வாகத்தின் மீது, அணியின் வேகப்பந்து வீரரான ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான்(வயது 31). இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் . அதோடு 76 ஒருநாள் போட்டிகளிலும் , ஒன்பது  டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து , அணியில் ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில் ஜுனைத் கான் பாகிஸ்தான் தேர்வு குழுவினர் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, அணியின் கேப்டன் மற்றும் குழு நிர்வாகத்தினருடன் நல்ல நட்பு தொடர்ந்தால் மட்டுமே போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே திறமையை நிரூபிக்க முடியும் என்று கூறினார்.

ஆனால் இதற்கு மாறாக அணியின் கேப்டன் மற்றும் நிர்வாகத்தினர் உடன் நெருக்கமாக இல்லாமல் இருந்தால், அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதுதான் பாகிஸ்தான் அணியின் நிலைமை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நான்  பாகிஸ்தான் அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடி உள்ளதாகவும், ஆனால் என்னைக் கேட்காமல் அணி நிர்வாகம் எனக்கு ஓய்வு அளித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். நான் எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தியும் ,என் மீது உள்ள வெறுப்புகளால் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே மற்ற நாடுகளில் உள்ள வேகப்பந்து வீரர்களை சுமையை எப்படி கையாளுகிறார்கள் என்று பாகிஸ்தான் நிர்வாகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |