பெல்ஜியத்தில் ஒரு விவசாயி தன் பகுதியில் இடையூறாக இருந்த ஒரு கல்லை தள்ளிவைத்ததால் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையே மாறியுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் இருக்கும் Erquelinnes என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி, அவரது இடத்தில் இடையூறாக இருந்த ஒரு கல்லை ட்ராக்டர் மூலமாக 2.29 மீட்டர் தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறார். அந்த கல்லினால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று அவர் அறியவில்லை.
அதாவது பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அந்த கல் சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அதனை அந்த விவசாயி நகர்த்தியதும் பெல்ஜியம் 1000 சதுர அடி அதிகரித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து வரலாறு தெரிந்த ஒரு நபர் அந்தப் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டபோது அந்த கல் நகர்த்திருப்பதை பார்த்துள்ளார்.
இது எதிர்பாராமல் நடந்த ஒரு செயல். எனினும் அதனால் ஏற்படும் விளைவு இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய பிரச்சனையாக உருவாக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நல்லவேளையாக உள்ளூர் அதிகாரிகள் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள். ஆனால் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிற்கு இடையில் ஏற்கனவே பிரச்சனை இருப்பதால், மேலும் கடும் விளைவுகள் ஏற்படுமோ? என்று கருதிய பெல்ஜியத்தின் அதிகாரிகள் அந்த விவசாயிடம் பேசி அந்தக் கல்லை இருந்த இடத்திலேயே வைக்குமாறு கேட்கவுள்ளார்கள்.