Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பிசிசிஐ அடுத்து இழக்க போகும் மிகப்பெரிய போட்டி’ …! வெளியான தகவல் …!!!

இந்தியாவில் நடைபெற இருந்த  உலக கோப்பை டி20 போட்டி , தற்போது இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

14 வது ஐபிஎல் தொடர்  ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி , பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால்,அன்று நடைபெற இருந்த போட்டி ரத்தானது. இதைத்தொடர்ந்து மேலும் பல வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.எனவே பாதுகாப்பு வளையத்திற்குள் ,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இருந்தும், வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

இதனால் இனிவரும் காலங்களில், ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுவது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரை போன்றே இந்த ஆண்டு இறுதியில், உலகக்கோப்பை  டி20  போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொற்றின்  3வது அலை பாதிப்பு ஏற்படும் என்பதால் , கண்டிப்பாக போட்டியை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இதுபற்றி ஐசிசி  கூட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், 90% முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இன்னும் ஒருசில தினங்களில் உலக கோப்பை டி20 போட்டிக்கான இடமாற்றம் ,அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது  ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |