Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருப்பதி சென்ற தம்பதி… “41சவரனுக்கு நாமம்” கைவரிசையை காட்டிய திருடர்கள்..!!

திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஏழுமலை என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது,

Image result for பூட்டை உடைத்து

வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 41 சவரன் தங்க நகை 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |