சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை அபிலாஷா பாட்டீல் (40) கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கு மராத்தி சினி நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Chhichhore என்ற படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.