விருதுநகரில் மது அருந்திய 8 மாணவர்களை காமராஜர் இல்லத்தை சுத்தசெய்யகோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையையடுத்த தேவரங்கூர் கலை கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்த எட்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மூன்றாம் ஆண்டு வகுப்புகளில் அனுமதிக்க மறுத்தது. இதை அடுத்து தங்களை வகுப்புகளில் அனுமதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சுதந்திர தினத்தன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு உத்தரவிட்டார். அங்கு வரும் பார்வையாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதோடு மாலை 4 மணி முதல் 6 மணி வரை காமராஜர் இல்லத்தில் வெளியே மது ஒழிப்பு குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி மாணவர்கள் 8 பேரும் காமராஜர் இல்லத்தில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.