Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. தமிழகத்தில் ஒரே நாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா…. அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்குட்பட்ட 810 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 24,898பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதில் 810 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |