நெல்லையில் வாலிபர் விஷத்தை குடித்து தற்கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டையில் அருணாசலம் என்கின்ற வாலிபர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய பெற்றோரிடம் புதிதாக பைக்கை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளை வாங்கித்தர முடியாது என்று அருணாச்சலத்தை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற வாலிபர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.