Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா அச்சம்…. தப்பிச்சென்ற முன்னாள் ராணுவ வீரர்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

கொரோனா அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற முன்னாள் ராணுவவீரர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டியூர் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஏழுமலை மற்றும் அவரது மனைவி ரேவதி ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இதில் ஏழுமலை முன்னாள் ராணுவ வீரராக இருந்துள்ளார். ஆனால் தற்போது மேல்மாயில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதனிடையே சிறிது நாட்கள் பிறகு மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது முடிவுகள் வெளிவரவில்லை. இதனால் ஏழுமலை மனமுடைந்து காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஏழுமலையை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் துத்திப்பட்டு, சிறுகளம்பூர் பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் ஒருவர் சடலமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற ஏழுமலை மனமுடைந்து காணப்பட்டதால், தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர் இறந்த பின்புதான் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின்  முடிவில் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |