செல்போன் பழுது பார்க்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயில் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவருடைய மனைவி மங்கை தனது பிள்ளைகளான கௌசல்யா மற்றும் சௌந்தர்ராஜன் போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த சௌந்தர்ராஜன் தனது செல்போனை பழுது பார்க்க பணம் தரும்படி தனது தாய் மங்கையிடம் கேட்டுள்ளார். அதற்கு மங்கை தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதற்கு சௌந்தர்ராஜன் கோபத்தில் தங்களுக்கு சொந்தமான அருகில் உள்ள ஒரு ஓட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார்.
இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் சௌந்தர்ராஜன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மங்கை அக்கம்பக்கத்தினர் உதவியோடு அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சௌந்தரராஜன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமுல்லைவாயல் காவல் துறையினரின் வாலிபரின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.