சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ஸ்ரீஜா வீட்டில் முக்கிய விசேஷம் நடைபெற்றுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ரீல் ஜோடிகளாக இணைந்த செந்தில் ஸ்ரீஜா ஆகியோர் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீஜா வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளது.
அதன்படி நடிகை ஸ்ரீஜாவின் தங்கை பார்வதிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் புதுமண தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/COfTkzPhZIN/?igshid=p426111u3spm