வேலூர் மீன் மார்க்கெட்டில் விதிகளை மீறிய விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் மக்கான் அருகில் புதிதாக மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதியம் 12 மணி வரை மட்டுமே இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி விதித்துள்ளனர். இதனால் மீன் வாங்கிச் செல்வதற்காக சென்ற பொதுமக்கள் கூட்ட கூட்டமாக முக கவசம் அணியாமல் நின்றுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மீன் மார்க்கெட்டுக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஒரு கடையில் சமூக இடைவெளி இல்லாமல், வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் அந்த கடைக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதுமட்டுமின்றி முக கவசம் அணியாத விற்பனையாளருக்கு ரூபாய் 3,500 அபராதம் விதித்துள்ளனர். மேலும் மார்க்கெட்டில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும் அபராதம் விதித்துள்ளனர். இதனைதொடர்ந்து மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.