லாரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் 62 வயதுடைய மாடத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடத்தி வேலை செய்வதற்காக அங்குள்ள சாலையின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென அந்த மூதாட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் மாடத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடத்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.