பிரபல நடிகை நமீதா புதிதாக ஓடிடி தளம் ஒன்றை துவங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
“நமீதா தியேட்டர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி தளத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களை மட்டுமே வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்குமென்றும், சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத்தின் மூலம் தங்களது படங்களை வெளியிடலாம் என்றும் நமீதா கூறியுள்ளார்.