73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சலுகையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே உரையாற்றும் போது சுதந்திர தினம் மற்றும் “ரக்ஷா பந்தன்” தினமான இன்று, எனது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை வழங்க போவதாக கூறினார்.
இதில் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், மாதக் கட்டணம் செலுத்தும் முறையில் இயங்கும் பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவித்தார்.