குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் முன்னணி நடிகரின் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் முடிந்த இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலக்கியவர்களும், குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு குவிந்துள்ளது. இந்நிலையில் நடிகர் அஷ்வின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் மகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் கதாநாயகியின் அண்ணன் கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.