Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் குந்தி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோழிப் பண்ணையில் இருக்கும் கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த போது மோகன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தனியார் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள் மோகனின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |