வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், வீடுகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர். இதனால் சிகிச்சை பலனின்றி தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கடந்த பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 8.5% தொற்று அதிகரித்து இருக்கின்றது. மேலும் பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம், மைசூர், ஒடுகத்தூர் போன்ற கிராமங்களில் 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.