தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
இதனையடுத்து கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படர்ந்து இருப்பது மலர் தூவிய போது அவர் கண் கலங்கினார். கருணாநிதி மறைந்த நாளில் மெரினாவில் இடம் கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது எப்படி அழுதாரோ, அதனைப் போலவே இன்றும் தந்தையின் புகைப்படத்தை பார்த்து அழுதார்.
தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியை ஏற்றுக் கொண்டதை அடுத்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் “cife minister of tamilnadu” என்று மாற்றப்பட்டுள்ளது. முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஸ்டாலின், கொரோனா நிதி ரூ.4000 திட்டத்திற்கு தனது முதல் கையெழுத்தை போட உள்ளார்.