மின்கம்பி அறுந்து கீழே விழுந்த விபத்தில் மின்வாரிய தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நயினார்பாளையம் பகுதியில் சோழன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக நயினார்பாளையம் மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொத்தாசமுத்திரம் பகுதியில் புதியதாக மின் கம்பம் நடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மின் கம்பத்தில் ஏறி சோழன் மின்கம்பியை இழுத்துக் கட்ட முயற்சி செய்த போது திடீரென மின் கம்பம் முறிந்து கீழே விழுந்து விட்டது.
இதனால் பலத்த காயமடைந்த சோழனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனின்றி சோழன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.