தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.சுவாசிக்க உயிர் காற்று கிடைக்காமல் மக்கள் அல்லர் படுகின்ற பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. தமிழகம் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். தமிழகத்தின் உரிமைகளை மீட்க ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என அவர் கூறியுள்ளார்.