Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேய் விரட்டுவதாக கூறி… பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்டத்தில் பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மஞ்ச நாயக்கனுரில் உள்ள கருப்பசாமி கோவிலில் காதப்பள்ளியை சேர்ந்த 40 வயதான அனில் குமார்  பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாமியாரான அனில்குமார் கோவிலுக்கு வந்த பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி அவரை அடித்து துன்புறுத்தியுளார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது.

இதனைதொடர்ந்து கோவிலுக்கு வந்த பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி அடித்தது குறித்து பலரும்  தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இத்தகவலை அறிந்த பொம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக சஞ்சய் குமார் வேல கவுண்டம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரியான அனில்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |