பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஒருவர் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் ஒரு நடிகை மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ்பேக்கில் மூர்த்தி திருமணம் பற்றிய காட்சி காட்டப் பட்டது. இதில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மீண்டும் இந்த சீரியலில் என்ட்ரீ கொடுக்கப் போகிறாராம். படப்பிடிப்பின்போது அவர் மூர்த்தி மற்றும் தனத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.