தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்க ஸ்டாலின் அவர்களுக்கும்,அவருடன் பதவியேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜகவின் மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.