Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

புதிய கட்டுப்பாடுகள்…. 12 மணி மேல் அனுமதியில்லை…. பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு….!!

கொரோனா காரணமாக 12 மணிக்கு மேல் கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை  கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை காலையில் வாங்கிச் செல்கின்றனர். இதனையடுத்து மதியம் 12 மணிக்கு பின் மளிகை கடை, டீ கடை, மற்றும் காய்கறிக் கடைகள் மூடப்பட்டது. மேலும் இந்த விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இதனால் வேலூர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து பேருந்துகளில் 50 சதவீத பணிகள் மட்டுமே பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில்  பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பால், மருந்துக்கடைகள், மற்றும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படுகின்றது. மேலும் பேக்கரி கடைகள் மற்றும்  ஓட்டல்கள் அனுமதி கொடுக்கும் நேரத்தில் மட்டுமே திறக்கப்பட்டன. இதில் பார்சல் மூலம் மட்டும் விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து இறைச்சிக் கடைகள் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள்  மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு 12 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

Categories

Tech |