Categories
உலக செய்திகள்

சர்ச்சையை கிளப்பிய புதிய கட்டுப்பாடுகள்… இதுனால எந்த பாதிப்பும் இல்ல… ஜெர்சி தீவு உறுதி..!!

ஜெர்சி தீவின் அரசாங்கம் மீன்பிடி பிரச்சனை காரணமாக மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளது.

பிரான்ஸ் மீனவர்கள் சமீபத்தில் இங்கிலீஷ் சேனலில் உள்ள ஜெர்சி தீவில் மீன்பிடிப்பதற்கு ஜெர்சி அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் அரசாங்கம் ஜெர்சி தீவு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரான்சிலிருந்து கேபிள் மூலம் கடலுக்கு அடியில் ஜெர்சி தீவுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கபடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெர்சி தீவின் மீன்பிடி பிரச்சனை காரணமாக மின்சாரத்தை துண்டிக்க போவதாக பிரான்ஸ் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியிலிருந்து வரும் மின்வினியோகம் தடைபட்டால் உள்ளூர் நிலையங்கள் நமது மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும் மின் வினியோகம் துண்டிக்கப்படுவதால் ஜெர்சி தீவின் அத்தியாவசிய உள்கட்டமைப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று ஜெர்சி தீவு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.

Categories

Tech |