14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில், ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பிசிசிஐ-க்கு பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. நேற்று இங்கிலாந்து வீரர்கள் தாயகத்திற்கு திரும்பியுள்ளனர், அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் ஒன்றான, மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களை, தங்களுடைய சொந்த விமானத்தில் மூலமாக அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. அதோடு அந்த விமானத்தில் மற்ற அணியை சேர்ந்த, வெளிநாட்டு வீரர்களையும், உடன் அழைத்துச் செல்வதற்காக அழைப்பு விடுத்துள்ளது. எனவே இந்த பணியை பிசிசிஐ செய்யும் என்று இருக்காமல், மும்பை இந்தியன்ஸ் அணி தாமாகவே முன்வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு, செயல்படுவதால் பாராட்டுகளை பெற்றுள்ளது .